லேசர் சிகிச்சை:
இன்றைய மருத்துவத்துறையில் எத்தனையோ அற்புதங்கள் நிகழ்கின்றன. அதில் ஒன்று தான் லேசர் (Leser) சிகிச்சை முறை. இது சத்தி வாய்ந்த லேசர் ஒளியைக் கொண்டு செய்யப்படும் துல்லியமான அறுவை சிகிச்சை முறையாகும்.
மூலத்துக்கு சிகிச்சை:
ஆசனவாய்ப் பகுதியில் காணப்படும் தசை மற்றும் ரத்த நாளங்களின் வீக்கம், மலம் கழிக்க அதிக நேரம் எடுப்பது, அதிகமாக அழுத்தம் கொடுத்து மலம் கழிப்பது, நாள்பட்ட மலச்சிக்கல், அதிக உடற்பருமன். குறைவான அளவு தண்ணீர் அருந்துவது, நார்ச்சத்து நிறைந்த உணவுகளைத் (Fibre Food) தவிர்ப்பது. இவையெல்லாம் மூல நோய்க்கான காரணங்கள்.
லேசர் மூலமாக இதற்கு தீர்வு காணமுடியும். மெல்லிய லேசர் கருவியை ஆசனவாய் வழியாக செலுத்தி, மூலத்துக்கு காரணமான ரத்த நாளங்கள் மூடப்படுகின்றன. இதனால் மூலம் சுருங்கி விடுவதோடு, ரத்தப் போக்கும் இருக்காது. இந்த லேசர் முறை மிகவும் துல்லியமானது. இது மற்ற பகுதிகளில் எந்தவொரு பாதிப்பையும் ஏற்படுத்தாது.
ஆசனவாயில் ஏற்படும் புண்களை ஃபிஷ்ஷர்ஸ் (Fissures) என்கிறோம். இதேபோல ஆசனவாயின் உள்புற தோலுக்குள் சில சமயம் தேவையற்ற குழாய் போன்ற அமைப்புகள் உருவாகலாம். இவற்றை கவனிக்காமல் விட்டால், நாளடைவில் அங்கே சீழ் (Pus) வரக்கூடும். இதனை பெளத்திரம் (Fistula) என்கிறோம். லேசர் சிகிச்சை மூலம் ஆசனவாயில் உள்ள புண்களையும் குணப்படுத்த முடியும்.
பொதுவாக ஆசனவாய்ப் பகுதிகளில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்ய அறுவை சிகிச்சைகளில், எளிய துரிதமான மற்றும் விரைவில் குணமளிக்கும் சிகிச்சையாக லேசர் விளங்குதிறது.
நரம்புச்சுருள் என்னும் வெரிகோஸ் வெயின் (Varicose Vein) பிரச்சனைக்குத் தீர்வு:
கால்கள் மற்றும் தொடைப்பகுதியில் காணப்படும் ரத்தக்குழாய்களில் சீரற்ற முறையில் ரத்தம் பாய்வதால், அவை சுருண்டு வீங்கிய நிலையில் காட்சியளிக்கின்றன. இதனை நரம்புத்சுரள் அதாவது வெரிகோஸ் வெயின் (Varicose Vein) என்கிறோம்.
முன்பெல்லாம், பாதிக்கப்பட்ட ரத்தக்குழாயை நீக்க அறுவை சிகிச்சை முறை பின்பற்றப்பட்டது. தற்போது லேசர் சிகிச்சை மூலமாக (EVLT) வெரிகோஸ் வெயின் பிரச்சனையை சரி செய்வது அற்புதமாக விளங்குகிறது.
இந்த சிகிச்சையில், மெல்லிய கம்பியை ரத்தக்குழாய்க்குள்ளே செலுத்தப்படுகிறது. லேசர் கொண்டு, தளர்ச்சி அடைந்த நரம்புகளை மூடப்படுகிறது. ஒரு மணி நேரத்தில் சிகிக்சை முடிந்து 3 மணி நேரத்துக்குள் நல்ல பலனை காணலாம். ஒரே வாரத்தில் அன்றாட வேலைகளில் ஈடுபடலாம். பக்க விளைவுகள் இல்லாத மிகவும் பாதுகாப்பான சிகிச்சை முறையாக விளங்குகிறது, இந்த லேசர் சிகிச்சை முறை.
பொதுவான அறுவை சிகிச்சை லேப்ராஸ்கோபி மற்றும் லேசர் அறுவை சிகிச்சை முறை, ஹண்டே மருத்துவமனையில், எண். 44, லஷ்மி டாக்கீஸ் ரோடு, ஷெனாய் நகர். சென்னை – 600030, சிறப்பாக இயங்கி வருகின்றன.
தொடர்பு கொள்க: 98410 11390 / 98400 36314
Read also Best Piles Hospital in Chennai.