Laparoscopic in Tamil

+91 9500060991

Laparoscopic Surgery is covered by Health Insurance Schemes. Cashless facility can be availed at Hande Hospital which is part of the PPN (Preferred Provider Nettwork) of Hospitals in Chennai.However if the patient does not have Health Insurance cover, the cost will be around Rs. 60,000.

Laparoscopic Gallbladder Surgery for Gallstones

 

ரத்தமில்லை, வலியில்லை! பித்தப் பைக்கு லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை! #HandeHospital

‘ஆபரேஷன்’ என்ற சொல்லைக் கேட்டாலே ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்கிறது இல்லையா? மயக்க மருந்து, ஆபரேஷன் தியேட்டர், மாஸ்க்கும் கிளவுஸும் போட்ட டாக்டர்கள், அறுவை சிகிச்சை தேவைப்படும் இடத்தை அறுத்து, ரத்தம் எல்லாம் வெளியேற… இப்படியெல்லாம் நீங்கள் கற்பனை செய்துகொள்ளவே தேவையில்லை! ஆம். இப்போதெல்லாம் ரத்தமின்றி, வலியின்றி, கண்ணுக்கே புலப்படாத அளவு உடலில் சிறிய கீறல் போட்டு பலவகையான ஆபரேஷன்களை முடித்து விடுகின்றனர் மருத்துவர்கள். இதற்குப் பேருதவி புரிகிறது லேப்ரோஸ்கோப்பி (Laparoscopy) தொழில்நுட்பம்.

லேப்ரோஸ்கோப்பிக் சர்ஜரி () மினிமல் ஆக்சஸ் சர்ஜரி (Minimal Access Surgery) என்றால் என்ன?

லேப்ரோஸ்கோப்பிக் சர்ஜரியில், முதலில் கார்பன்-டை-ஆக்சைடு கொண்டு வயிற்றுப் பகுதி (abdominal cavity) நிரப்பப்படுகிறது. பின்னர் சிறிய தொலைநோக்கு கருவி (Telescope) ஒன்றைத் தொப்புள் குழி வழியாக, வயிற்றுப் பகுதிக்குள் நுழைக்கின்றனர். தொலைநோக்கியின் முனையில் அமைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் உடலுக்குள் என்னென்ன இருக்கிறது என்பதனை நேரலையில் திரையில் பார்க்க முடிகிறது. தேவைப்பட்டால் உடலில் பிற சிறு துளைகளையும் இட்டு, அதற்குள் கருவிகளைச் சொருகி அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

கல்லீரலால் சுரக்கப்படும், செரிமானத்துக்கு அவசியமான பித்த நீரைச் (Bile) சேமித்து வைக்கும் வேலையைச் செய்வது ‘பித்தப் பை (Gall Bladder)’. இந்த உறுப்பு பழுதடைந்தால் அதனை முழுவதுமாக அகற்ற முடியும், இந்த அறுவை சிகிச்சை முறையைக் ‘கொலசஸ்டெக்டமி (cholecystectomy)’ என்றழைக்கின்றனர். லேப்ரோஸ்கோப்பி மூலம் செய்யப்படும் கொலசஸ்டெக்டமி அறுவை சிகிச்சை மிகவும் எளிமையானது. நோயாளி விரைவாக குணமடைந்து ஓரிரு நாள்களில் வீடு திரும்ப முடியும். 

கொலசஸ்டெக்டமி எப்போது தேவைப்படும்?

* பித்தப் பையில் கல் தோன்றினால்…

* பித்த நீர் செல்லும் பாதையில் கல் அடைப்பு ஏற்பட்டால்…

* பித்தப்பை வீக்கம்

* பித்தப் பையில் கட்டிகள்

* பித்தக் கற்களால் ஏற்படும் கணைய அழற்சி

லேப்ரோஸ்கோப்பிக் கொலசஸ்டெக்டமியின் பயன்கள் என்ன?

* வலியுடன் கூடிய தழும்பு ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.

* சராசரி அறுவை சிகிச்சையில், மூன்று நாள்கள் வரை நோயாளி நிமிர்ந்த வண்ணமே இருக்க வேண்டும். இது லேப்ரோஸ்கோப்பி முறையில் தவிர்க்கப்படுகிறது.

* அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தின் தோற்றத்தில் மாறுபாடுகள் இருப்பதில்லை.

* சராசரி அறுவை சிகிச்சைக்கும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சைக்கும் கிட்டத்தட்ட ஒரே கட்டணம்தான்.

அனைத்து அறுவை சிகிச்சைகளையும் லேப்ரோஸ்கோப்பி முறையில் செய்ய முடியுமா?

முடியாது! தேவையைப் பொறுத்து, கட்டி அல்லது அடிபட்ட இடத்தைப் பொறுத்து சராசரி அறுவை சிகிச்சை அவசியமாக இருந்தால், அதனைச் செய்ய வேண்டி வரும். சில நேரங்களில் முற்பாதி அறுவை சிகிச்சை லேப்ரோஸ்கோப்பி மூலமும், பிற்பாதி திறந்தநிலை அறுவை சிகிச்சை (Open surgery) மூலமும் செய்யப்படுகிறது. நோயாளிகள் இதுகுறித்து தெளிவு பெற வேண்டியது அவசியமாகும்.

ஹண்டே மருத்துவமனையின் நவீன லேப்ரோஸ்கோப்பி சிகிச்சைகள்

பித்தப்பையை அகற்ற லேப்ரோஸ்கோப்பிக் கொலசஸ்டெக்டமி, அப்பெண்டிக்ஸை அகற்ற லேப்ரோஸ்கோப்பிக் அப்பென்டக்டமி (Laparoscopic Appendectomy), ஒட்டிக்கொள்ளும் குடல் பகுதிகளைச் சரி செய்ய லேப்ரோஸ்கோப்பிக் அதெஸியோலைசிஸ் (Laparoscopic adhesiolysis), கர்ப்பப்பையை அகற்ற லேப்ரோஸ்கோப்பிக் ஹிஸ்டெரக்டமி (Laparoscopic Hysterectomy) மற்றும் குடலிறக்கத்தைச் (Hernia) சரி செய்யவும் லேப்ரோஸ்கோப்பி மூலம் மிகச்சிறந்த தீர்வினை ஹண்டே மருத்துவமனை வழங்கி வருகிறது.
ரத்தமின்றி, வலியின்றி, விரைவில் குணமடைந்து வீடு திரும்பிட பேருதவி புரியும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை பற்றி மேலுமறிய, ஹண்டே மருத்துவமனையைத் தொடர்புகொள்ளுங்கள்.

இப்போதே அழையுங்கள்: 98410 11390

 

 

 

Related Articles

‘மூலம்’ நோயிலிருந்து விரைவில் விடுதலை!

இன்றைய நவீன சிகிச்சைகளின் உதவியோடு மூலம் நோயை மிகமிக எளிதாக குணப்படுத்த முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும். hande hospital உடல் நலமே நிம்மதியான நிறைவான வாழ்வின் அடித்தளம்; உண்ட உணவு செரித்து,…

Book Your Appointment