இரத்தசேதமின்றி, வலியின்றி பித்தப்பைக்கு லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை!

பித்தப்பைக்கு லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை
Contents

பித்தப்பைக்கு லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை!( Laparoscopic treatment for gallbladder!) தழும்பின்றி, ரத்தமின்றி, வலியின்றி, விரைவில் வீடு திரும்பலாம் என்பது லேப்ரோஸ்கோப்பி அறுவை சிகிச்சையின் மிகப்பெரிய அனுகூலமாகும்!

‘ஆபரேஷன்’ என்ற சொல்லைக் கேட்டாலே ஒருவித பயமும் பதற்றமும் தொற்றிக்கொள்கிறது இல்லையா? மயக்க மருந்து, ஆபரேஷன் தியேட்டர், மாஸ்க்கும் கிளவுஸும் போட்ட டாக்டர்கள், அறுவை சிகிச்சை தேவைப்படும் இடத்தை அறுத்து, இரத்தம் எல்லாம் வெளியேற… இப்படியெல்லாம் நீங்கள் கற்பனை செய்துகொள்ளவே தேவையில்லை!

ஆம். இப்போதெல்லாம் இரத்தசேதமின்றி, வலியின்றி, கண்ணுக்கே புலப்படாத அளவு உடலில் சிறிய கீறல் போட்டு பலவகையான ஆபரேஷன்களை முடித்து விடுகின்றனர் மருத்துவர்கள். இதற்குப் பேருதவி புரிகிறது லேப்ரோஸ்கோப்பி (Laparoscopy) தொழில்நுட்பம்.

பித்தப்பை என்றால் என்ன?

பித்தப்பை என்பது பேரிக்காய் வடிவ உறுப்பு ஆகும், இது கல்லீரலின் வலது பக்கத்திற்கு கீழே உள்ளது. கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் செரிமான திரவத்தை (பித்தம் என அழைக்கப்படுகிறது) சேகரித்து கெட்டியாக்குவதே பித்தப்பையின் முக்கிய நோக்கம். சாப்பிட்ட பிறகு பித்தப்பையிலிருந்து பித்தம் வெளியிடப்படுகிறது, அது செரிமானத்திற்கு உதவுகிறது. சிறு குடலுக்குள் தட்டையான குழாய் தடங்கள் (பித்த நாளம்) வழியாக பித்தம் நகர்கிறது. பித்தப்பை அகற்றுவது செரிமானத்தின் எந்தவொரு குறைபாட்டுடனும் தொடர்புடையது அல்ல.

லேப்ரோஸ்கோப்பிக் சர்ஜரி (அ) மினிமல் ஆக்சஸ் சர்ஜரி (Minimal Access Surgery) என்றால் என்ன?

லேப்ரோஸ்கோப்பிக் சர்ஜரியில், முதலில் கார்பன்-டை-ஆக்சைடு (carbon dioxide) கொண்டு வயிற்றுப் பகுதி (abdominal cavity) நிரப்பப்படுகிறது. பின்னர் சிறிய தொலைநோக்கு கருவி (Telescope) ஒன்றைத் தொப்புள் குழி வழியாக வயிற்றுப் பகுதிக்குள் நுழைக்கின்றனர்.

தொலைநோக்கியின் முனையில் அமைக்கப்பட்டிருக்கும் கேமரா மூலம் உடலுக்குள் என்னென்ன இருக்கின்றன என்பதனை நேரலையில் திரையில் பார்க்க முடிகிறது. தேவைப்பட்டால் உடலில் பிற சிறு துளைகளையும் இட்டு, அதற்குள் கருவிகளை நுழைத்து அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது.

பித்தப்பைக்கு லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை

கல்லீரலால் சுரக்கப்படும், செரிமானத்துக்கு அவசியமான பித்த நீரைச் (Bile) சேமித்து வைக்கும் வேலையைச் செய்வது, ‘பித்தப் பை (Gall Bladder)‘. இந்த உறுப்பு சரியாக இயங்காத நிலையில் கற்கள் உண்டாகலாம்.

அதனை முழுவதுமாக அகற்ற இந்த அறுவை சிகிச்சை முறை ‘கோலிசிஸ்டெக்டமி (cholecystectomy)’ செய்யப்படுகிறது. லேப்ரோஸ்கோப்பி மூலம் செய்யப்படும் கோலிசிஸ்டெக்டமி அறுவை சிகிச்சை மிகவும் எளிமையானது. நோயாளி விரைவாக குணமடைந்து ஓரிரு நாள்களில் வீடு திரும்ப முடியும்.

கோலிசிஸ்டெக்டமி எப்போது தேவைப்படும்?

  1. பித்தப் பையில் கல் தோன்றினால்
  2. பித்த நீர் செல்லும் பாதையில் கல் அடைப்பு ஏற்பட்டால்
  3. பித்தப்பை வீக்கம்
  4. பித்தப்பையில் கட்டிகள்
  5. பித்தப்பையில் சீழ் பிடித்தால்

லேப்ரோஸ்கோப்பிக் கோலிசிஸ்டெக்டமி-யின் பயன்கள் என்ன?

  1. வலியுடன் கூடிய தழும்பு ஏற்படாமல் தவிர்க்க முடிகிறது.
  2. சாதாரண அறுவை சிகிச்சையில், மூன்று நாள்கள் வரை நோயாளி நிமிர்ந்த வண்ணமே இருக்க வேண்டும். இது லேப்ரோஸ்கோப்பி முறையில் தவிர்க்கப்படுகிறது.
  3. அறுவை சிகிச்சை செய்யப்பட்ட இடத்தின் தோற்றத்தில் மாறுபாடுகள் இருப்பதில்லை.
  4. சாதாரண அறுவை சிகிச்சைக்கும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சைக்கும் கிட்டத்தட்ட ஒரே கட்டணம்தான்.

அனைத்து அறுவை சிகிச்சைகளையும் லேப்ரோஸ்கோப்பி முறையில் செய்ய முடியுமா?

முடியாது! தேவையைப் பொறுத்து, கட்டி அல்லது அடிபட்ட இடத்தைப் பொறுத்து சாதாரண அறுவை சிகிச்சை அவசியமாக இருந்தால், அதனைச் செய்ய வேண்டி வரும்.

சில நேரங்களில் முற்பாதி அறுவை சிகிச்சை லேப்ரோஸ்கோப்பி மூலமும், பிற்பாதி திறந்தநிலை அறுவை சிகிச்சை (Open surgery) மூலமும் செய்யப்படுகிறது. நோயாளிகள் இதுகுறித்து தெளிவு பெற வேண்டியது அவசியமாகும்.

‘ஹண்டே மருத்துவமனை’யின் நவீன லேப்ரோஸ்கோப்பி சிகிச்சைகள்.

பித்தப்பையை அகற்ற ‘லேப்ரோஸ்கோப்பிக் கோலிசிஸ்டெக்டமி’, அப்பெண்டிக்ஸை அகற்ற ‘லேப்ரோஸ்கோப்பிக் அப்பென்டக்டமி (Laparoscopic Appendectomy)’, ஒட்டிக்கொள்ளும் குடல் பகுதிகளைச் சரி செய்ய ‘லேப்ரோஸ்கோப்பிக் அதெஸியோலைசிஸ் (Laparoscopic Adhesiolysis)’.

கர்ப்பப்பையை அகற்ற ‘லேப்ரோஸ்கோப்பிக் ஹிஸ்டெரக்டமி (Laparoscopic Hysterectomy)’, சினைப்பைக் கட்டியை அகற்ற ‘லேப்ரோஸ்கோப்பிக் ஒவேரியன் சிஸ்டக்டமி (Laparoscopic Ovarian Cystectomy)’, கருத்தடை அறுவை சிகிச்சைக்கு ‘லேப்ரோஸ்கோப்பிக் ஸ்டெரிலைசேஷன் (Laparoscopic Sterilization)’, குழந்தையில்லாமை நிலையைக் கண்டறிய ‘டயக்னோஸ்டிக் லேப்ரோஸ்கோப்பி (Diagnostic Laparoscopy)’ மற்றும் குடலிறக்கத்தைச் (Hernia) சரி செய்ய ‘லேப்ரோஸ்கோப்பிக் ஃபண்டோபிலிகேஷன் (Laparoscopic Fundoplication)’ மூலம் மிகச்சிறந்த தீர்வினை ஹண்டே மருத்துவமனை வழங்கி வருகிறது.

இரத்தசேதமின்றி, வலியின்றி, விரைவில் குணமடைந்து வீடு திரும்பிட பேருதவி புரியும் லேப்ரோஸ்கோப்பி சிகிச்சை பற்றி மேலுமறிய, ஹண்டே மருத்துவமனையைத் தொடர்புகொள்ளுங்கள்.

இப்போதே அழையுங்கள்: +91 98410 11390

Read also Laparoscopic Cholecystectomy (Gallbladder Removal)

Book Your Appointment