‘மூலம்’ நோயிலிருந்து விரைவில் விடுதலை!

இன்றைய நவீன சிகிச்சைகளின் உதவியோடு மூலம் நோயை மிகமிக எளிதாக குணப்படுத்த முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

hande hospital

hande hospital

உடல் நலமே நிம்மதியான நிறைவான வாழ்வின் அடித்தளம்; உண்ட உணவு செரித்து, சத்துக்கள் அனைத்தும் கிரகிக்கப்பட்டு, மலம் கழித்துவிட்டாலே உடலின் பாதி பிரச்சனைகள் தீர்த்துவிடும், செரிமானத்தின் இறுதிக்கட்டமான மலம் கழித்தலில் ஏற்படும் சிக்கலால் துன்புறுபவர்கள் பலர். நாட்பட்ட மலச் சிக்கல் பல பிரச்சனைகளை உண்டாகக்கூடியது. அதுவே ‘மூல நோய்’ வர ஒரு காரணம்.

மூலத்தை ஏற்படுத்தும் காரணிகள்…

பெருங்குடல் முடியும் பகுதியான ஆசன வாயைச் சுற்றி மிருதுவான ‘குஷன்’ போன்ற தசை அமைப்பு காணப்படுகிறது. ஆசனவாயில் தொடர்ந்து அழுத்தம் ஏற்பட்டால் இந்தத் தசைப்பகுதி வீக்கமடையும். வலியை ஏற்படுத்தும் இந்த வீக்கத்தையே ‘மூலம்’ என அழைக்கிறோம். மூல நோய் ஏற்பட்டுள்ள பகுதிகளில் வெடிப்புகள் ஏற்பட்டு இரத்தம் கசியவும் வாய்ப்புள்ளது. நாட்பட்ட மலச்சிக்கல் மற்றும் அதிக அழுத்தம் கொடுத்து மலம் கழித்தல் ஆகியவை மூல நோய்’ ஏற்பட முக்கிய காரணங்களாகும். கர்ப்பம், அதிக பளு தூக்குதல் மற்றும் நாட்பட்ட வயிற்றுப்போக்கு ஆகியவையும் மூல நோயை ஏற்படுத்த வாய்ப்புண்டு, வயது ஆக ஆக மூலநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றன.

ஆசன வாயைச் சுற்றி எரிச்சல், அரிப்பு, வலி, இரத்தக் கசிவு மற்றும் அடைப்பு ஏற்பட்டுள்ளது போன்ற உணர்வு – இவையெல்லாம் மூல நோயின் அறிகுறிகளாகும். இதே போல ஆசன வாய்ப் பகுதியில் சிலருக்குப் புண்கள் வரலாம். இதைப் பௌத்திரம் (Fistula) என அழைக்கிறோம்.

வாழ்க்கை நடைமுறையை மாற்றுங்கள்…

மும்மரமாக சுற்றிச் சூழல்பவர்களுக்கு மூல நோய் மற்றும் பௌத்திரம் ஏற்படும் வாய்ப்பு மிகவும் குறைவு. அதிக உடல் உழைப்பு இல்லாமல் ஓரிடத்திலேயே உட்கார்ந்து வேலை செய்பவர்களுக்கும், செரிமானப் பிரச்சனை உள்ளவர்களுக்கும் பின்னாளில் மூல நோய் ஏற்பட அதிக வாய்ப்புள்ளது. உற்சாகமான நடைபயிற்சி, உடற்பயிற்சி, ஏரோபிக்ஸ், தாகத்தை அடக்காமல் நீர் அருந்துவது, வாழைப்பழம் உண்பது, நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து மிகுந்த பழங்கள் மற்றும் காய்கறிகளை அதிகம் உணவில் சேர்த்துக் கொள்வது மூல நோய்க்கான சிறந்த வாழ்வியல் தீர்வுகளாக அமைகின்றன.

மருத்துவ சிகிச்சை செய்துகொள்ள தயங்க வேண்டாம்!

நாட்பட்ட மூல நோயால் அவதிப்படுவோர், அதை வெளியில் சொல்லாமல் இருப்பதோடு, தகுந்த மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லதல்ல. இன்றைய நவீன சிகிச்சைகளின் உதவியோடு மூல நோயை மிகமிக எளிதாக குணப்படுத்த முடியும் என்பதை நாம் அறிந்துகொள்ள வேண்டும்.

முன்பெல்லாம் மூல நோய்க்கு வழக்கமான அறுவை சிகிச்சைகள் செய்யப்பட்டு வந்தன. வலி மிகுந்த இந்த முறையால், ரத்த இழப்பு ஏற்படுவதோடு, நோயாளி குணமாவதற்கும் பல நாட்கள் ஆகும். தற்போது மூல வியாதி உள்ளவர்களுக்கு ‘லேசர்’ மூலம் அறுவை சிகிச்சை செய்யப்படுகிறது. ‘லேசர்’ ‘வெஸ்சல் சீலர்’ மற்றும் ‘HAL’ போன்ற பல அறுவை சிகிச்சைகள் வந்துவிட்டன. இதில் நோயின் தன்மையைப் பொருத்து எந்த வகையான சிகிச்சை தேவைப்படும் என்பது மருத்துவரால் முடிவு செய்யப்படும். ரத்துப்போக்கு இல்லாத, வலி குறைவான இச்சிகிச்சை அனைத்து தரப்பினருக்கும் ஏற்ற எளிய, அற்புதமான சிகிச்சையாக பார்க்கப்படுகிறது. மிகுந்த உடல்வேதனை மற்றும் மனவேதனையில் தவித்துவந்த பல மூல நோயாளிகள்கூட, இச்சிகிச்சை செய்து கொண்டு விரைவிலேயே வியாதியைக் குணப்படுத்தி, மிகுந்த நிம்மதியுடன் வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூல நோய் சிகிச்சை பற்றி மேலுமறிய நவீன லேசர் சிகிச்சையில் அனுபவம் வாய்ந்த ‘ஹண்டே மருத்துவமனை’யைத் தொடர்பு கொண்டு இன்றே மூல நோய்க்கான லேசர் சிகிச்சையை எடுத்துக்கொள்ளலாம். 25 ஆண்டுகளுக்கும் மேலாக செயலாற்றி வரும் ஹண்டே மருத்துவமனையில் அனுபவமுள்ள மருத்துவர்கள் மற்றும் நவீன மருத்துவ உபகரங்கள் உதவியோடு மூல நோயை வென்றிடுங்கள்! கைபேசி எண் 91-98410 11390

விவரங்களுக்கு க்ளிக் செய்க…: https://handehospital.org/departments/piles-laser-treatment-chennai/

Source: vikatan.com
Hande Hospital, India • Read 4 Reviews

Related Articles

Responses

Your email address will not be published. Required fields are marked *

Book Your Appointment